மாவட்ட செய்திகள்

காரையூர், ஆவுடையார்கோவில், கோட்டைப்பட்டினம் அரசு பள்ளி, கல்லூரியில் யோகா தினம் + "||" + Yoga Day at Government College, College, Kottayam

காரையூர், ஆவுடையார்கோவில், கோட்டைப்பட்டினம் அரசு பள்ளி, கல்லூரியில் யோகா தினம்

காரையூர், ஆவுடையார்கோவில், கோட்டைப்பட்டினம் அரசு பள்ளி, கல்லூரியில் யோகா தினம்
காரையூர், ஆவுடையார்கோவில், கோட்டைப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரியில் யோகா தின நிகழ்ச்சிகள் நடந்தன.
காரையூர்,

இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மலைக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் யோகா செய்தனர். இதேபோல பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் சித்த மருத்துவ அலுவலர் சுயமரியாதை கலந்து கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளித்தார்.


இதேபோல காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் சித்த மருத்துவர் மாமுண்டி, மருத்துவர் சசிக்குமார், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு யோகா செய்தனர். இதேபோல காரையூர் அப்துல் மொகைதீன் அரசு மேல்நிலைப்பள்ளி, சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பளி, மேலத்தானியம் அரசு மேல்நிலப்பளிகளில் சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

ஆவுடையார் கோவில், கோட்டைப்பட்டினம்

ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தின நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சுகந்தி தலைமை தாங்கி யோகாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்றுனர்கள் ராமநாதன் மார்கண்டேயன், அம்பிகாபதி ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர். முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜீவரெத்தினம் வரவேற்றார். முடிவில் ரெத்தின சிவக்குமார் நன்றி கூறினார்.

கோட்டைப்பட்டினம் அருகே உள்ள மஞ்சக்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மதிவாணன், மாணவர்களுக்கு யோகா, தியானம் எவ்வாறு செய்வது குறித்து பயிற்சி அளித்தார். இதில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி தயாரிக்கும் பணி தீவிரம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் தேசிய கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2. புதுக்கோட்டையில் தமிழ்நாடு, புதுச்சேரி அளவிலான யோகா போட்டிகள்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு, புதுச்சேரி அளவிலான யோகா போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
3. மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
4. மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
5. யோகாவை வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வலியுறுத்தல்
யோகா, அனைத்துக்கும் மேலானது என்றும், அதை வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.