நாகர்கோவிலில் தகவல் அறியும் உரிமை சட்ட மேல்முறையீடு மனுக்கள் மீது விசாரணை
குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் தலைமையில் நாகர்கோவிலில் நடந்தது.
நாகர்கோவில்,
குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து உள்ள னர். இதில் உரிய பதில்கள் கிடைக்க பெறாதவர்கள் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்காக மேல்முறையீடுதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டு இருந்தனர்.
இவர்களிடம் மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதலில் குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வித்துறை, நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்வித்துறை சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) 2–வது நாளாக நடக்கிறது.

Related Tags :
Next Story