தஞ்சையில் இருந்து மும்பைக்கு திருச்சி வழியாக 20 டன் ராட்சத கொதிகலன் ஏற்றி சென்ற டிரைலர் லாரி


தஞ்சையில் இருந்து மும்பைக்கு திருச்சி வழியாக 20 டன் ராட்சத கொதிகலன் ஏற்றி சென்ற டிரைலர் லாரி
x
தினத்தந்தி 27 Jun 2019 10:45 PM GMT (Updated: 27 Jun 2019 7:18 PM GMT)

தஞ்சையில் இருந்து மும்பைக்கு திருச்சி வழியாக 20 டன் ராட்சத கொதிகலன் ஏற்றி சென்ற டிரைலர் லாரி பாரம் தாங்காமல் அச்சுகள் உடைந்தன.

திருச்சி,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள தொழிற்சாலையில் சிமெண்டு ஆலைகள் மற்றும் இதர ஆலைகளுக்கு ராட்சத கொதி கலன் (பாய்லர்) உற்பத்தி செய்யப்பட்டு, அவை இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு டிரைலர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் செங்கிப்பட்டியில் 20 டன் எடையில் ராட்சத கொதிகலன் தயார் செய்யப்பட்டு, அது மும்பையில் உள்ள சிமெண்டு ஆலைக்கு நேற்று 22 டயர்கள் பொருத்தப்பட்ட டிரைலர் லாரியில் ராட்சத கிரேன் மூலம் ஏற்றப்பட்டு திருச்சி வழியாக கொண்டு செல்லப்பட்டது.

திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் செந்தண்ணீர்புரம் அருகே ராட்சத கொதிகலனுடன் லாரி வந்தது. அப்போது லாரியில் ஏற்றப்பட்டிருந்த 20 டன் எடையுள்ள கொதிகலனின் பாரம் தாங்காமல் டயர்கள் பொருத்தப்பட்ட அச்சுகள் முறிந்தன. இதனால், டயர்கள் கழன்று சாலையில் உருண்டோடின. கொதிகலன் லாரியுடன் அப்படியே சாலையில் உட்கார்ந்தது. நல்லவேளையாக திருச்சி செந்தண்ணீர்புரத்தில் அணுகு சாலையில் வரும்போது அச்சுகள் முறிந்ததால், போக்குவரத்துக்கு இடையூறு ஏதும் ஏற்படவில்லை. பின்னர், கொதிகலனை ராட்சத கிரேன் மூலம் நிலைநிறுத்தி மாற்று டிரைலர் லாரி மூலம் மும்பை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

Next Story