போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு


போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 Jun 2019 10:45 PM GMT (Updated: 27 Jun 2019 7:53 PM GMT)

போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில், ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள சந்தப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

கரூர்-க.பரமத்தி

கரூர் வெங்கமேட்டில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு மாவட்ட ஊர்க்காவல் படை தளபதி சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

க.பரமத்தியில் நடைபெற்ற ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

க.பரமத்தி அரசு பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கடைவீதி வழியாக சென்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷம் எழுப்பியும் சென்றனர்.

Next Story