காதல் தோல்வியால் விபரீதம் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி பிளேடால் கையை அறுத்துக்கொண்டார்


காதல் தோல்வியால் விபரீதம் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி பிளேடால் கையை அறுத்துக்கொண்டார்
x
தினத்தந்தி 27 Jun 2019 10:30 PM GMT (Updated: 27 Jun 2019 8:02 PM GMT)

சென்னையில் காதல் தோல்வி காரணமாக பிளேடால் கையை அறுத்துக்கொண்டு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

சென்னை,

சென்னை வேப்பேரி பகுதியை சேந்தவர் மாசிலாமணி. இவரது மகன் இளையராஜா (வயது 22). வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் இளையராஜா அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை அந்த இளம்பெண் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி

காதல் தோல்வி காரணமாக கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இளையராஜா இருந்துள்ளார். இந்தநிலையில் இளையராஜா விடுதி அறையில் நேற்று முன்தினம் இரவு தனது 2 கை மணிக்கட்டுகளையும் பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து அந்த அறைக்கு வந்த அவரது நண்பர் பாரதிராஜா, ரத்த வெள்ளத்தில் கிடந்த இளையராஜாவை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவர் தற் கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story