ஆரல்வாய்மொழியில் மலையில் மாடு மேய்க்க அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்


ஆரல்வாய்மொழியில் மலையில் மாடு மேய்க்க அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2019 9:30 PM GMT (Updated: 28 Jun 2019 7:23 PM GMT)

ஆரல்வாய்மொழியில் மலையில் மாடுகளை மேய்க்க அனுமதி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆயிரக்கணக்கான மாடுகளை மலைப்பகுதியில் மேய்ச்சலுக்காக அனுப்பி வந்தனர். இதற்காக வனத்துறையினர் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வந்தது.

தற்போது கடந்த சில ஆண்டுகளாக மலை பகுதியில் மாடுகளை மேய்க்க அனுமதிக்கப் படுவதில்லை. மேலும் மாடுகளை மேய்த்தால் அவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையடுத்து மலையில் மாடுகளை மேய்க்க அனுமதிக்கக்கோரி விவசாயிகள் ஆரல்வாய்மொழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டுமாடு வளர்ப்போர் சங்க தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜா, பொருளாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

போராட்டத்தின் போது மலையில் மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும். மலையில் 10 முதல் 20 நாட்கள் தங்கி இருந்து மாடுகளை மேய்த்திட சிறப்பு அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என தமிழக அரசையும், வனத்துறையையும் வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், தேனி மாவட்ட மலை மாடு வளர்ப்போர் சங்க தலைவர் பெனிட்டோ பவுல்ராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீகுமார், அண்ணாத்துரை, சுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story