மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விவசாயி சாவு


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விவசாயி சாவு
x
தினத்தந்தி 29 Jun 2019 3:30 AM IST (Updated: 29 Jun 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

தர்மபுரி,

தர்மபுரியை சேர்ந்த மாரியப்பன் (வயது 60). விவசாயி. இவர் தர்மபுரியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாரியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story