மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் அரசுக்கு, தொழிற்சங்கம் கோரிக்கை


மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் அரசுக்கு, தொழிற்சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Jun 2019 10:45 PM GMT (Updated: 28 Jun 2019 8:17 PM GMT)

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசுக்கு, தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை

சி.ஐ.டி.யு. மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மின் அழுத்தத்துறை, மின் கம்பி பராமரிப்பு பணி உள்ளிட்ட முக்கிய பணிகளில் ஒப்பந்த ஊழியர்களை பயன்படுத்துகிறது. இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி மின் கம்பி அறுந்து விழுந்து 3 மணி நேரம் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் கடந்த 26-ந் தேதி மின் அழுத்த மின் மாற்றி வெடித்து விபத்து ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த இரு பணிகளிலும் ஒப்பந்த ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். இந்த இரு விபத்துக்கு முறையான பராமரிப்பு இல்லாததே காரணம். எனவே அரசு தொழில் பாதுகாப்பு இயக்குனர் தலையிட்டு, இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story