பட்ஜெட் குறித்து சமுதாய தலைவர்களிடம் நாராயணசாமி கருத்து கேட்டார்


பட்ஜெட் குறித்து சமுதாய தலைவர்களிடம் நாராயணசாமி கருத்து கேட்டார்
x
தினத்தந்தி 29 Jun 2019 4:45 AM IST (Updated: 29 Jun 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்தையும் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டறிந்து வருகிறார்.

புதுச்சேரி,

புதுவை பட்ஜெட் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்தையும் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டறிந்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று அவர் தலைமை செயலக கருத்தரங்க அறையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட சமுதாய நிர்வாகிகளிடம் கருத்துகேட்டார்.

கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் பல்வேறு அரசுத்துறை இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு சமுதாய தலைவர்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அப்போது தெரிவித்தனர்.

Next Story