திருவள்ளூர் அருகே கார் மோதி தொழிலாளி சாவு


திருவள்ளூர் அருகே கார் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 5 July 2019 11:10 PM GMT (Updated: 5 July 2019 11:10 PM GMT)

திருவள்ளூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகேயுள்ள கூடப்பாக்கம் குச்சிக்காட்டை சேர்ந்தவர் பாஸ்கர் (48). இவர் சென்னை கோயம்பேட்டில் சுமை து£க்கும் தொழிலாளியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பாஸ்கர் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக வெளியே சென்றார். கூடப்பாக்கம் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவி இந்திரா ராஜேந்திரன் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story