காரில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்தல் - பெண் உள்பட 2 பேர் கைது
புதுச்சேரியில் இருந்து காரில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்தி வந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலையில் வழக்கம் போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரை சந்தேகத்தின் பேரில் வழி மறித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த காருக்குள் 5 மூட்டைகளில் 300 பாக்கெட் கள்ளச்சாராயமும், 7 அட்டைகளில் 336 மதுபாட்டில்களும், 3 அட்டை பெட்டிகளில் 72 டின் பீர் பாட்டில்களும் இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்த னர்.
இதையடுத்து கார் டிரைவர் மணிகண்டன்(வயது36), காரில் இருந்த தனலட்சுமி(50) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பூட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள். இருவரிடமும் போலீசார் விசாரித்த போது, சங்கராபுரம் பகுதியில் விற்பனை செய்வதற்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களையும், சாராய பாக்கெட்டுகளையும் கடத்தி வந்ததாக தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் மதுபானங்களின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
Related Tags :
Next Story