சிதம்பரம் அருகே விஷம் குடித்துவிட்டு தூக்கில் தொங்கிய பெண் சாவு


சிதம்பரம் அருகே விஷம் குடித்துவிட்டு தூக்கில் தொங்கிய பெண் சாவு
x
தினத்தந்தி 6 July 2019 10:30 PM GMT (Updated: 6 July 2019 5:33 PM GMT)

சிதம்பரம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம், 

சிதம்பரம் எடத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி பிரவினா (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசன் தனது மனைவியை அழைத்து கொண்டு மலேசியா சென்றார். மேலும் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலைபார்த்து வந் தார். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பிரவினாவை மலேசியா போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்ததும், பிரவினா தனது கணவருடன் சிதம்பரத்துக்கு வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆத்திரமடைந்த பிரவினா தனது கணவரை பிரிந்து சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

மேலும் சிதம்பரத்தில் உள்ள ஒரு கவரிங் கடையில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிரவினா விஷத்தை எடுத்து குடித்தார். பின்னர் அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரவினா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story