திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.10¼ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.10¼ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 14 July 2019 4:15 AM IST (Updated: 14 July 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் மற்றும் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்களில் செல்லும் பயணிகள், அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அவ்வாறு நடத்தப்படும் சோதனையின்போது கடத்தல் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள், வெளிநாட்டு பணம் போன்றவை, அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரைக்காலை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் அமெரிக்க டாலர், யூரோ, ஸ்டெர்லிங், கத்தார் ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து மணிவண்ணனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.10 லட்சத்து 24 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story