மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலம் அருகே பயங்கரம்; வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை + "||" + Woman killed alone in a house near Satyamangalam

சத்தியமங்கலம் அருகே பயங்கரம்; வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை

சத்தியமங்கலம் அருகே பயங்கரம்; வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை
சத்தியமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சத்தியமங்கலம்,

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ். அவருடைய மனைவி தேவி (வயது 55). இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலம் வந்து வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு குமார் என்ற மகனும், துளசி என்ற மகளும் உள்ளனர். இதில் குமார் திருமணம் ஆகி சத்தியமங்கலம் காந்தி நகரிலும், துளசி திருமணம் ஆகி ஈரோடு பகுதியிலும் வசித்து வருகின்றனர்.

சுரேஷ் லாரி கிளீனர். வேலை வி‌ஷயமாக வெளியூரிலே தங்கி இருந்து வருகிறார். எப்போதாவது வீட்டுக்கு வந்து மனைவியை பார்த்துவிட்டு செல்வார். இதனால் தேவி தனியாக இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று தேவி வெகுநேரமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மதியம் 2 மணி அளவில் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு தேவி தரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் தேவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? என்று தெரியவில்லை. பிணத்தின் அருகே பாதி குடித்த நிலையில் மது பாட்டிலும், மஞ்சள் கயிறும் கிடந்தது.

அவற்றை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சத்தியமங்கலம் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம்: தலைமறைவான ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு
பள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
2. நிலத்தகராறில் கொலை: 8 பெண்கள் உள்பட 23 பேருக்கு ஆயுள் தண்டனை
ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹன்ஸ்டிகா பகுதியை சேர்ந்த திலிப் கன்வர் என்பவரின் குடும்பத்துக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
3. பெட்ரோல் குண்டுகள் வீசி 2 பேர் கொலை: சேலம் கோர்ட்டில் வக்கீல் சரண்
பெட்ரோல் குண்டுகள் வீசி 2 பேரை கொலை செய்த வழக்கில் போலீசார் தேடி வந்த மதுரையை சேர்ந்த வக்கீல் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
4. சீர்காழியில், வீடு புகுந்து பாட்டி-பேத்தி கொலை: மேலும் 2 பேர் கைது
சீர்காழியில் வீடு புகுந்து பாட்டி-பேத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. மூலனூர் அருகே சம்பவம்: புதுப்பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது
புதுப்பெண்ணை கொன்று உடலை அமராவதி ஆற்றின் கரையோரம் வீசிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவருடன் தொடர்பு வைத்து இருந்ததால் கொன்றதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.