குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று பெரம்பலூர்- துறையூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா அம்மாபாளையம் அருகே உள்ள அடைக்கம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று பெரம்பலூர்- துறையூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர்- துறையூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story