முத்தாரம்மன் கோவிலில் நகை கொள்ளை; 3 பேர் சிக்கினர் லாக்கரை உடைக்க முடியாததால் 75 பவுன் நகைகள் தப்பின
தென்தாமரைகுளம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. லாக்கரை உடைக்க முடியாததால் 75 பவுன் நகைகள் தப்பின. இந்த கொள்ளை தொடர்பாக 3 பேர் சிக்கினர்.
தென்தாமரைகுளம்,
தென்தாமரைகுளம் அருகே முகிலன்குடியிருப்பில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் இரவு 8 மணிக்கு நடை அடைப்பது வழக்கம். கோவில் பூசாரியாக அதே ஊரை சேர்ந்த பன்னீர்செல்வம் உள்ளார். நேற்று அதிகாலை கோவிலில் பூஜை செய்வதற்காக சென்ற பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து திடுக்கிட்ட அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அங்கு அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. உடனே அவர் இதுகுறித்து ஊர் தலைவர் பார்த்தசாரதியிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் கண்காணிப்பு கேமரா இருந்தது. இந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, நள்ளிரவு 1 மணிக்கு 5 நபர்கள் கோவிலின் உள்ளே வருகிறார்கள். கேமராவை பார்த்தவுடன் ஒரு பக்கமாக சென்று கேமராவை வேறு பக்கம் திருப்பி வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். கருவறைக்குள் இருந்த லாக்கர் பெட்டியை திறக்க முயன்றனர். அதனை திறக்க முடியவில்லை. மேலும் லாக்கரை உடைக்கும் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் 5 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். லாக்கரை உடைக்க முடியாததால் 75 பவுன் நகைகள் தப்பின.
பின்னர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த சிலரின் உருவங்களை போல் இருந்தது தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story