சேலத்தில் இருந்து அத்திவரதர் பாதுகாப்புக்காக 100 போலீசார் அனுப்பி வைப்பு


சேலத்தில் இருந்து அத்திவரதர் பாதுகாப்புக்காக 100 போலீசார் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 26 July 2019 4:45 AM IST (Updated: 26 July 2019 4:42 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இருந்து அத்திவரதர் பாதுகாப்புக்காக 100 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சேலம்,

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலிக்கிறார். இதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதன் காரணமாக தினமும் ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்திவரதர் தரிசனத்துக்காக நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் காஞ்சீபுரத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிலர் உயிரிழந்தனர். அதைதொடர்ந்து மாநிலம் முழுவதும் இருந்தும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி சேலத்தில் இருந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 100 போலீசார் அத்திவரதர் பாதுகாப்புக்காக காஞ்சீபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story