பெஸ்ட் பஸ் எங்கு வருகிறது என்பதை அறியும் ‘செல்போன் செயலி’ விரைவில் அறிமுகம்


பெஸ்ட் பஸ் எங்கு வருகிறது என்பதை அறியும் ‘செல்போன் செயலி’ விரைவில் அறிமுகம்
x
தினத்தந்தி 6 Aug 2019 11:04 PM GMT (Updated: 6 Aug 2019 11:04 PM GMT)

பெஸ்ட் பஸ் எங்கு வருகிறது என்பதை அறியும் வகையிலான செல்போன் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மும்பை,

மும்பை மாநகராட்சி நிதி உதவி அளிக்க முன்வந்ததை அடுத்து பெஸ்ட் நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக பெஸ்ட் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது. தற்போது குறைந்தப்பட்ச பெஸ்ட் பஸ் கட்டணம் ரூ.5 ஆகும்.

இந்தநிலையில் பெஸ்ட் நிறுவன நாள் விழாவில் அதன் பொது மேலாளர் சுரேந்திரகுமார் பட்கே பேசியதாவது:-

பெஸ்ட் பயணிகள் ஒரே பாசை பயன்படுத்தி பஸ் தவிர மின்சார ரெயில், மெட்ரோ ரெயில்களிலும் பயணம் செய்ய வசதியாக ஸ்மார்ட் கார்டை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

புதிய செயலி

இதேபோல பெஸ்ட் பஸ்களில் ஜி.பி.எஸ். பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் விரைவில் ‘MY BEST' என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த புதிய செயலி மூலம் பயணிகள் பெஸ்ட் பஸ்கள் எந்த இடத்தில் வருகிறது, எப்போது வரும் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலி பயணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். பெஸ்ட் சேவைக்காக விரைவில் 1,650 ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட உள்ளன.

இதில், 400 பஸ்கள் வாங்க ஏற்கனவே மாநகராட்சி ஒப்புதல் அளித்துவிட்டது. 1,250 பஸ்கள் வாங்குவது தொடர்பான டெண்டர் விடும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story