கோவை மாநகர பகுதியில், விதிமுறைகளை மீறி இயக்கிய 37 ஆட்டோக்கள் பறிமுதல்
கோவை மாநகர பகுதியில் விதிமுறைகளை மீறி இயக்கிய 37 ஆட்டோக்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
கோவை,
கோவைமாநகர பகுதியில்7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதில் ஏராளமான ஆட்டோக்கள்தகுதி சான்று இல்லாமலும், காலாவதியானஅனுமதி சீட்டுடன், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களைஏற்றிச்செல்வதாக கலெக்டர்மற்றும்கோவை போக்குவரத்துஇணை ஆணையாளர்ஆகியோருக்கு புகார்சென்றது.
இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவட்டார போக்குவரத்துஅதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கோவை மத்திய வட்டார போக்குவரத்துஅதிகாரி பாஸ்கரன்தலைமையில்வட்டார போக்குவரத்துஅதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள்அதிரடி சோதனையில்ஈடுபட்டனர்.
கோவைமாநகர பகுதியில்உள்ளஒப்பணக்காரவீதி,காந்திபுரம், கோவை ரெயில் நிலையம் அருகேஉள்பட பல்வேறுபகுதிகளில் சோதனை நடந்தது. அப்போது மொத்தம் 231 ஆட்டோக்கள் சோதனை செய்யப்பட்டது. இதில் பல்வேறு ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. இது குறித்துவட்டார போக்குவரத்துஅதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்தது,தகுதி சான்றுஇல்லாமல் ஆட்டோக்களை ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டியது போன்ற செயல்களுக்காக 37 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கோவையில் நடத்தப்பட்ட ஆய்வில் 47ஆட்டோக்களுக்கு சோதனைஅறிக்கை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 10 வாகனங்களுக்கு அபராதம் விதித்துரூ.4 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது.
இந்த சோதனைதொடர்ந்து நடத்தப்படும். ஆட்டோக்களில் அளவுக்குஅதிகமாக பயணிகளைஏற்றிச்சென்றாலோ, விதிமுறைகளை மீறி ஆட்டோ ஓட்டினாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story