மணல் கடத்திய அண்ணன் - தம்பி கைது
வந்தவாசியில் மணல் கடத்திய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி,
வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்தவாசி - காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் வீரம்பாக்கம் கூட்டுரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்த போது, மணல் கடத்தி சென்றது தெரியவந்தது.
சரக்கு ஆட்டோவின் அருகில் இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மேகநாதன் (வயது 38), அவருடைய தம்பி முருகன் (35) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story