மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம்: ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது - கவர்னர் கிரண்பெடி கருத்து

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கவர்னர் கிரண்பெடி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
மறுசீரமைப்பு செய்ய முடியாத பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், அதனால் கடலில் சேரும் குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு படகு பயணம் நேற்று புதுவையில் இருந்து தொடங்கியது. கடற்கரை சாலையில் தலைமை செயலகம் அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு படகு பயணத்தை கவர்னர் கிரண்பெடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த படகு பயணத்தில் 2 பெண்கள் உள்பட 15 கடல் சாகச வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த பயணம் புதுவையில் இருந்து கோவளம் வரை 120 கி.மீ. மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்ற வழக்கில் மத்திய அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இரண்டு யூனியன் பிரதேசங்கள் புதிதாக தோன்றியிருக்கும் நிலையில் இனிமேல் வரவிருக்கும் முடிவு முக்கியமானதாக இருக்கும். கோர்ட்டு இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து புதிதாக விசாரணை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story