நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் - ஆத்தூர் காமராஜர் அணை வறண்டது


நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் - ஆத்தூர் காமராஜர் அணை வறண்டது
x
தினத்தந்தி 11 Aug 2019 10:45 PM GMT (Updated: 11 Aug 2019 10:26 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் ஆத்தூர் காமராஜர் அணை வறண்டது.

பட்டிவீரன்பட்டி,

ஆத்தூரில் காமராஜர் அணை உள்ளது. மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை 24 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, கூழையாறு, புல்லாவெளி மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஓடைகள் வழியாக ஆத்தூர் காமராஜர் அணைக்கு வந்து சேரும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அணை 3 முறை நிரம்பி வழிந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில்லை.

இந்தநிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால் அணை வறண்டு காட்சியளிக்கிறது. இதனால் காமராஜர் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் திண்டுக்கல் நகர், சித்தையன்கோட்டை, சின்னாளபட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகள் மற்றும் ஆத்தூர் தாலுகாவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுமட்டுமின்றி விவசாய பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை பெய்யாததால் அணைக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் வரத்து இன்றி உள்ளன. எனவே மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


Next Story