மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 7:51 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் : திருவள்ளூரில் நேற்று தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் நேற்று தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். முடிவில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு மாவட்ட கலெக்டர் வாழ்த்துகளை தெரிவித்து அட்சதை தூவி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் திரளான அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story