தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்


தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 7:56 PM GMT)

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரண்மனைகுறிச்சி கிராமத்தில் தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரண்மனைகுறிச்சி கிராமத்தில் தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் காளியம்மனை வேண்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் கலந்து கொண்டு திருமழபாடி கொள்ளிடக் கரையில் இருந்து மேள தாளங்களுடன் பால்குடங்களை சுமந்து கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் காளியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால் குடங் களினால் சிறப்பு பாலபிஷேகம் செய்யப்பட்டு, பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story