பெங்களூருவில் இருந்து மழை பாதித்த பகுதிகளுக்கு கர்நாடக அரசு பஸ் சேவை மீண்டும் தொடக்கம்


பெங்களூருவில் இருந்து மழை பாதித்த பகுதிகளுக்கு கர்நாடக அரசு பஸ் சேவை மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 13 Aug 2019 12:06 AM GMT (Updated: 13 Aug 2019 12:06 AM GMT)

கர்நாடகத்தில் பெலகாவி, தட்சிண கன்னடா உள்ளிட்ட 17 மாவட்டங்கள் மழையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் உள்ள சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பெங்களூரு,

பெங்களூருவில் இருந்து பெலகாவி, மங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி(அரசு) பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வரமகாலட்சுமி மற்றும் பக்ரீத் பண்டிகைக்காக தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை இருந்தும், பெங்களூருவில் இருந்து வடகர்நாடகம் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கும் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது சில மாவட்டங்களில் மழை நின்றிருப்பதால், மழை பாதித்த பகுதிகளுக்கு பெங்களூருவில் இருந்து நேற்று கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் சேவை மீண்டும் தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் இருந்து மேலும் பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story