வெங்கல் அருகே வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை சாவு; குளிக்க வைத்தபோது பரிதாபம்


வெங்கல் அருகே வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை சாவு; குளிக்க வைத்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 13 Aug 2019 9:45 PM GMT (Updated: 13 Aug 2019 7:42 PM GMT)

வெங்கல் அருகே குளிக்க வைத்தபோது தண்ணீரில் மூழ்கி குழந்தை பரிதாபமாக இறந்தது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள விளாப்பக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அருண் (வயது 1½). நேற்று முன்தினம் குழந்தை அருணை பெற்றோர் வாளியில் இருந்த தண்ணீரில் நிற்க வைத்து குளிக்க வைத்து கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக குழந்தை தண்ணீரில் குளித்து கொண்டிருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் குழந்தை தண்ணீரில் மூழ்கி மயங்கியது.

உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக சென்னை குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தை அருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story