மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளில் 50 பவுன் நகை திருட்டு + "||" + 50-pound jewelry theft at 2 homes near Kummidipoondi

கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளில் 50 பவுன் நகை திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளில் 50 பவுன் நகை திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளில் 50 பவுன் நகை திருடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில் குடும்பத்தினரோடு வசித்து வருபவர் ராஜீவ் (வயது 34). இவர் கவரைப்பேட்டையை அடுத்த பண்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.


கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில், கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்தினருடன் ராஜீவ் சென்றிருந்தார். நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு தனியறையில் இருந்த பீரோவை சாவி போட்டு திறந்து அதில் இருந்த 35 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 3 பட்டு சேலைகள் மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதே பகுதியில் உள்ள விவசாயி சொக்கலிங்கம் (62) என்பவரும் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினரோடு சென்னை அம்பத்தூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பினார்.

அவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது தனியறையில் இருந்த பீரோவை சாவி போட்டு திறந்து அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.2½ லட்சம் மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு அருகே, லாரி உரிமையாளர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோடு அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 16 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. வேலூரில் முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
வேலூரில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
3. கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் வெட்டிக்கொலை; 3 பேரிடம் விசாரணை
கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. கும்மிடிப்பூண்டி அருகே சீரான மின்சாரம் வழங்கக்கோரி கடையடைப்பு போராட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே சீரான மின்சாரம் வழங்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடந்தது.
5. கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் மூடப்பட்ட புறகாவல் நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதி முகாமில் மூடப்பட்ட புறகாவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என இலங்கை தமிழர் அகதிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.