மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் + "||" + The inflow increase in Courtallam waterfalls: Happy baths for tourists

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலம் அருவிகளில் நேற்று நீர்வரத்து அதிகரித்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக சீசன் நன்றாக உள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் குளிப்பதற்காக நெல்லை மாவட்டத்தின் மட்டும் அல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள்.


இந்த நிலையில் குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை பன்னீர் தெளித்தார் போல் தூறியது. வெயிலே இல்லை. குளிர்ந்த காற்று வீசியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.

நேற்று அதிகாலையில் குற்றாலம் மெயின் அருவியில் திடீரென்று நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பகல் 12 மணி அளவில் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அதில் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் நேற்று ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குற்றாலம் அருவிகளில் வெள்ளம் தணிந்தது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளம் தணிந்தது. இதனால் நேற்று அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
2. வடகாடு மலைப்பகுதியில் மழை: பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
வடகாடு மலைப்பகுதியில் பெய்த மழையினால் பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
3. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்றைய அளவை விட இன்று சற்று அதிகரித்துள்ளது.
4. நீர்வரத்து குறைந்தது: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
5. நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.