வானவில் : ‘ஸ்மார்ட் கியூப்’ பூட்டு


வானவில் : ‘ஸ்மார்ட் கியூப்’ பூட்டு
x

மேஜை டிராயரில் நீங்கள் விரும்பும் ஆவணங்களை பத்திரமாக வைக்க உதவுகிறது ‘ஸ்மார்ட் கியூப்’ என்ற பெயரிலான நவீன பூட்டு.

வீடுகளிலேயே சில விஷயங்களை பத்திரமாக வைக்க வேண்டியிருக்கும். பணியாளர்கள் அதிகம் புழங்கும் வீடுகளில் ரகசியம் கருதி சில ஆவணங்களை நீங்கள் பத்திரமாக வைக்க நினைக்கலாம். இப்போதைய நவீன வீடுகளில் இட வசதி கருதி பீரோக்கள் பயன்படுத்துவது கிடையாது. வார்ட் ரோப் மட்டுமே. இத்தகைய வார்ட்ரோப்கள் அல்லது உங்களது மேஜை டிராயரில் நீங்கள் விரும்பும் ஆவணங்களை பத்திரமாக வைக்க உதவுகிறது இந்த ‘ஸ்மார்ட் கியூப்’ என்ற பெயரிலான நவீன பூட்டு. இதை உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் மட்டுமே திறக்க முடியும். இதனால் மற்றவர்களால் நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் பகுதிகளை திறக்க முடியாது. சில வீடுகளில் குழந்தைகளிடமிருந்து மருந்துப் பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அதுபோன்ற சமயங்களில் இந்த ஸ்மார்ட் கியூப் நிச்சயம் உதவியாக இருக்கும். இதை யாரேனும் உடைக்க முயற்சித்தால் உடனடியாக ஸ்மார்ட்போனுக்கு தகவல் வந்துவிடும். இதன் விலை சுமார் ரூ.10,200.

Next Story