கோவை மாவட்டத்தை சேர்ந்த 14 பேருக்கு நல்லாசிரியர் விருது


கோவை மாவட்டத்தை சேர்ந்த 14 பேருக்கு நல்லாசிரியர் விருது
x
தினத்தந்தி 5 Sept 2019 4:00 AM IST (Updated: 4 Sept 2019 10:17 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தை சேர்ந்த 14 பேருக்கு நல்லாசிரியர் விருது இன்று (வியாழக்கிழமை) வழங்கப்படுகிறது.

கோவை,

ஆசிரியராக இருந்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ந் தேதி (இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆசிரியர்களை போற்றும் வகையில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது.

அதேபோல் ஒவ்வொரு மாநில அரசுகளும் தனித்தனியே ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான இன்று (வியாழக்கிழமை) நல்லாசிரியர் விருது சென்னையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 377 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அதில் கோவை மாவட்டத்தில் மொத்தம் 14 ஆசிரியர்கள் இந்த விருதை பெற தேர்வாகி உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-

14 ஆசிரியர்கள்

1. குழந்தைவேல், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பன்னிமடை.

2. வெங்கடேஷன், முதுநிலை ஆசிரியர், ஸ்ரீகே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளி, சிவில் ஏரோ.

3. ராஜராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர், அரசு மேல்நிலைப்பள்ளி, குனியமுத்தூர்.

4. புனித பொற்கொடி, முதுகலை ஆசிரியை, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சித்தாபுதூர்.

5. சண்முகதேவி, இடைநிலை ஆசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளலூர்.

6. ரமேஷ், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கால் மண்டபம்.

7. செல்வராஜ், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசூர்.

8. பத்மினி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரிய நாயக்கன்பாளையம்.

9. கணேசன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, செஞ்சேரிபுத்தூர்.

10. ருக்மணி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வக்கம்பாளையம், பொள்ளாச்சி.

11. முருகேசன், தலைமைஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இடையபாளையம், ஒண்டிப்புதூர்.

12. சீலியாமேரி வில்லியம், இடைநிலை ஆசிரியை, பி.எஸ்.ஜி.தொடக்கப்பள்ளி, வேடப்பட்டி.

13. பாக்கியலட்சுமி, துணை முதல்வர், ஆர்.வி.எஸ்.மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, சூலூர்.

14. சோரன் ரேனோ, இடைநிலை ஆசிரியை, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, அவினாசிரோடு.

ஆகிய 14 பேர் நல்லாசிாியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர் களுக்கு கல்வித்துறை அதிகாரிகள், சக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story