பெரப்பன்சோலை கிராமத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்


பெரப்பன்சோலை கிராமத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 5 Sept 2019 4:00 AM IST (Updated: 5 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

பெரப்பன்சோலை கிராமத்தில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டர்ஆசியா மரியம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்

ராசிபுரம்,

ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த பெரப்பன்சோலை கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக நூற்றுக்கணக்கான மனுக்களை பெற்றார்.

முகாமில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் இ.கே.பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கலாவதி, ராசிபுரம் தாசில்தார் பாஸ்கர் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story