உத்திரமேரூரில் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை


உத்திரமேரூரில் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை
x
தினத்தந்தி 7 Sept 2019 3:45 AM IST (Updated: 6 Sept 2019 11:49 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூரில் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டார்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா சாலவாக்கத்தை அடுத்துள்ள காவிதண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 38). தனியார் பள்ளி வாகன கிளனரான இவருக்கு கோமதி (32) என்ற மனைவியும் ஒரு பெண்குழந்தையும், 2 ஆண்குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை காவிதண்டலம் சுடுகாடு அருகில் உள்ள கால்வாய் ஒன்றில் கோமதி நிர்வாண கோலத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாலவாக்கம் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன், படாளம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? குற்றவாளிகள் யார்? என்று சாலவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story