வாக்காளர் பட்டியலை சரிபார்த்து அரசு பணியாளர்கள் சான்றை அனுப்ப வேண்டும் - கலெக்டர் உத்தரவு
வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் அரசு பணியாளர்கள் தங்கள் பதிவினை சரிபார்த்து, அதற்கான சான்றினை ஒருவார காலத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வாக்காளர் அட்டையில் உள்ள தவறுகளை வாக்காளர்களே நேரடியாக திருத்தம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் தங்களது மற்றும் தங்கள் குடும்பத்தினரது வாக்காளர் அட்டையில் பதிவாகி இருக்கும் பிறந்த தேதி, பெயர், உறவு முறை, புகைப்படம், முகவரி, பாலினம் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என்ற விவரங்களை www.nvsp.in என்ற வலைதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதில் ஏதேனும் பிழையிருந்தால் தகுந்த ஆவணத்தை உள்ளடு செய்து, தாங்களே திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், Vot-er He-lp Li-ne app ( Beta Ve-rs-i-on ) என்ற செயலியை டவுன்லோடு செய்தும், இத்திருத்தங்களை மேற்கொள்ளலாம். அனைத்து துறை தலைவர்களும் தங்களது அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரது வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டது என்ற சான்றினை ஒரு வார காலத்திற்குள் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story