ஒர்லி தொகுதியில் போட்டியிடும் ஆதித்ய தாக்கரேயின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி வேட்பு மனுவில் தகவல்


ஒர்லி தொகுதியில் போட்டியிடும் ஆதித்ய தாக்கரேயின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி வேட்பு மனுவில் தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2019 5:00 AM IST (Updated: 4 Oct 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

ஒர்லி தொகுதியில் போட்டியிடும் ஆதித்ய தாக்கரேயின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி என வேட்பு மனுவில் தகவல் கூறப்பட்டுள்ளது.

மும்பை, 

ஒர்லி தொகுதியில் போட்டியிடும் ஆதித்ய தாக்கரேயின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி என வேட்பு மனுவில் தகவல் கூறப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல்

பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் வாரிசாக ஆதித்ய தாக்கரே தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர், 21-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஒர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக ஆதித்ய தாக்கரே லோயர் பரேல், ஒர்லி வீதிகளில் திரளான தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய ஆதித்ய தாக்கரேயுடன் சிவசேனா மூத்த தலைவர்களும் சென்று இருந்தனர். இதில் ஆதித்ய தாக்கரே தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்த போது அவரது தந்தையும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, தாய் ராஷ்மி தாக்கரே மற்றும் குடும்பத்தினர் மட்டுமே உடன் இருந்தனர்.

ரூ.16.05 கோடி சொத்து

வேட்பு மனுவுடன் சொத்து மதிப்பு அடங்கிய பிரமான பத்திரத்தையும் அவர் தாக்கல் செய்தார். இதன்படி அவருக்கு ரூ. 11 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.4 கோடியே 67 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்பட மொத்தம் ரூ.16 கோடியே 5 லட்சம் சொத்துகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.இதில் ரூ.10 கோடியே 36 லட்சம் வங்கி வைப்புதொகை, ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பி.எம்.டபிள்யு கார், ரூ.64 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மற்றும் இதர சொத்துகள் ரூ.10 லட்சத்து 22 ஆயிரம் ஆகியவை அடங்கும்.

இதைத்தொடர்ந்து வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த பின் ஆதித்ய தாக்கரே கூறியதாவது:-

முதல்-மந்திரி பட்னாவிஸ் ஒரு சாதாரண மனிதர் தான். அதுபோல நானும் ஒரு சாதாரண மனிதன் தான். எனினும் எந்த பதவியின் பின்னாலும் நான் ஓடவில்லை’’

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story