நிதி உதவி கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு


நிதி உதவி கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2019 10:30 PM GMT (Updated: 4 Oct 2019 9:58 PM GMT)

நிதி உதவி கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கும் நிலை உள்ளது.

திருத்தங்கல்,

பிரதமரின் புதிய திட்டமாக விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் பிரித்து வழங்கப்படுகிறது. இந்த வகையில் எரிச்சநத்தம் பகுதியில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டு விட்டது. ஆனால் 2 தவணைக்கான தொகையை பெற வங்கிகளை விவசாயிகள் அணுகியுள்ளனர்.

அப்போது ஆதார் அட்டை விவரப்படி பெயர் உள்ளதில் குளறுபடி இருப்பதால் பணத்தை வங்கி கணக்கில் சேர்க்க இயலாது என்று கைவிரித்து விட்டனர். இதனால் நிதி உதவி பெற முடியாமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பா.ஜனதா கட்சியின் விவசாய அணி செயலாளர் ரெங்கராஜா ஒரு வேண்டு கோள் விடுத்துள்ளார். அதில் குளறுபடி இருப்பதாக முதலிலேயே குறிப்பிட்டு இருக்கலாம், அதைவிடுத்து கடந்த முறை பணம் வழங்கி விட்டு இப்போது தவிக்க விடுவது முறையற்றது. இதில் உரிய ஆலோசனை வழங்கி விவசாயிகளுக்கு நிதி உதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய அரசின் உன்னத திட்டத்துக்கு அவப்பெயரை அதிகாரிகள் பெற்றுத்தரக்கூடாது என்று கூறியுள்ளார்.

Next Story