மாவட்ட செய்திகள்

கோவையில் ஆன்லைன் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி பங்குதாரர் கைது; உரிமையாளர் தலைமறைவு + "||" + Run by an online finance company Rs.50 crores fraud Partner arrested Owner Absconding

கோவையில் ஆன்லைன் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி பங்குதாரர் கைது; உரிமையாளர் தலைமறைவு

கோவையில் ஆன்லைன் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி பங்குதாரர் கைது; உரிமையாளர் தலைமறைவு
கோவையில் ஆன்லைன் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பங்குதாரர் கைது செய்யப்பட்டார். நிறுவன உரிமையாளர் உள்பட பலர் தலைமறைவாக உள்ளனர். கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கூறியதாவது:-
கோவை,

கோவை சாய்பாபா காலனி மற்றும் துடியலூரில் ரவிக்குமார் என்பவர் ‘வி.வி. டிரேடர்ஸ்’ என்ற ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன் பங்குதாரராக ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சென்ராயனூரை சேர்ந்த செல்வராஜ் இருந்தார்.

இவர்கள் இருவரும் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகவட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ரூ.1 லட்சம் செலுத்தினால் தினமும் 2 சதவீத வட்டியுடன் 25 வாரத்துக்கு தருவதாக தெரிவித்தனர்.. இதை நம்பி துடியலூர், சாய்பாபா காலனி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினர். அவர்களுக்கு முதல் 3 மாதம் வரை அதிக வட்டியுடன் ஆன்லைன் மூலம் பணம் வழங்கினர். இதனை நம்பி மேலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்த தொடங்கினார்கள்.

இந்த நிலையில் திடீரென அந்த நிதி நிறுவனம் மூடப்பட்டது. இதனால் பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிநிறுவனத்தின் பங்குதாரரான செல்வராஜை(வயது45) கைது செய்தனர். உரிமையாளர் ரவிக்குமார் தலைமறைவாகி விட்டார்.

போலீசார் செல்வராஜிடம் விசாரித்தபோது இவர்கள் இருவரும் சேர்ந்து ரூ.50 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைதான செல்வராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரவிக்குமாரை தேடி வருகிறார்கள். இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்தது.அவர்களை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாகூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
நாகூர் அருகே வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. குடிபோதையில் தகராறு: மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது
கோவையில் குடிபோதையில் மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. திருவாரூர் ரவுடி கொலையில் திடுக்கிடும் தகவல்: ஜாமீனில் எடுத்து நண்பர்களே தீர்த்துக்கட்டிய பயங்கரம்
திருவாரூரில் நடந்த பிரபல ரவுடி கொலை வழக்கில், அவரது நண்பர்களே ஜாமீனில் எடுத்து தீர்த்து கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 9 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. குடியாத்தம் அருகே மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி
குடியாத்தம் அருகே மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.14¾ லட்சம் பண மோசடியில் ஈடுபட்டவர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி புகார் மனு கொடுத்தார்.
5. கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேர் கைது
கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.