அனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்


அனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Oct 2019 10:45 PM GMT (Updated: 9 Oct 2019 6:39 PM GMT)

அனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நகைக்கடை, அடகுக்கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன் (திருத்துறைப்பூண்டி), இன்ஸ்பெக்டர் அறிவழகன் (கோட்டூர்), சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவதாஸ், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி கூறுகையில்,

அனைத்து நகைக்கடை, அடகுகடைகளிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். திருடர்கள் திருட முயற்சித்தால் சத்தம் கேட்கும் வகையில் அலாரம் பொருத்த வேண்டும்.

ஒத்துழைப்பு

இரவு காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில் நகைக்கடை, அடகுக்கடை உரிமையாளர் சங்க தலைவர் நாராயணமூர்த்தி, செயலாளர் இளங்கோவன், அடகுக்கடை சங்க செயலாளர் ஆதப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story