மாவட்ட செய்திகள்

சீர்காழி பகுதியில் பொறைவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை + "||" + Farmers demand to open water for irrigation in Sirkazhi area

சீர்காழி பகுதியில் பொறைவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

சீர்காழி பகுதியில் பொறைவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
சீர்காழி பகுதியில் பொறைவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி,

சீர்காழி பகுதியில் பொறைவாய்க்கால் செல்கிறது. இதன் மூலம் திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையாறு, ராதாநல்லூர், தாழந்தொண்டி, வழுதலைக்குடி, வருசபத்து, எடமணல், ஆமப்பள்ளம், கடவாசல், வடகால், விநாயகக்குடி, செம்மங்குடி, விளந்திடசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேற்கண்ட வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் நாற்று விட்டு நடுவதற்கு பதிலாக நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் இந்த ஆண்டும் வாய்க்காலில் தண்ணீர் செல்லவில்லை. இதனால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர். தற்போது நெற்பயிர்கள் சிறிது வளர்ந்துள்ளது.

தண்ணீர் திறந்துவிட வேண்டும்

ஆனால் மழை பெய்யாததாலும், பொறை வாய்க்காலில் தண்ணீர் செல்லாததாலும் நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே பொதுப்பணி துறையினர் பொறைவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டு கருகும் நிலையில் உள்ள சம்பா நேரடி நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
2. சென்னிமலை அருகே உயர்மின் கோபுரங்களில் மின் கம்பி பொருத்தும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு
சென்னிமலை அருகே உயர் மின்கோபுரங்களில் மின் கம்பி பொருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், பயிர் இழப்பீடு வழங்காததால் தடுத்து நிறுத்தினர்.
3. குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்காததால் விவசாயிகள் ஏமாற்றம்
குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
4. மீன்சுருட்டி பகுதியில் பருவமழை பொய்த்ததால் கருகும் பயிர்கள் விவசாயிகள் கவலை
மீன்சுருட்டி பகுதியில் பருவமழை பொய்த்ததால் கருகி வரும் பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5. கர்நாடக வனப்பகுதியில் இருந்து 130 யானைகள் தேன்கனிக்கோட்டை காட்டுக்கு வந்தன விவசாயிகள் கவலை
கர்நாடக வனப்பகுதியில் இருந்து 130 யானைகள் தேன்கனிக்கோட்டை காட்டுக்கு வந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.