சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 22 Oct 2019 4:15 AM IST (Updated: 21 Oct 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது

கோவை,

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது27), தொழிலாளி. இவர் அந்த பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது ஊனமுற்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட கனகராஜுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு ரூ.1 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக் கில் அரசு தரப்பில் வக்கீல் ஆர்.சரோஜினி ஆஜராகி வாதாடினார்.

Next Story