சுஜித் இறப்பை வைத்து அரசியல் செய்வது எதிர்க்கட்சி தலைவருக்குரிய பொறுப்பான செயல் அல்ல
சுஜித் இறப்பை வைத்து அரசியல் செய்வது எதிர்க்கட்சி தலைவருக்குரிய பொறுப்பான செயல் அல்ல என்று ஸ்டாலினுக்கு, அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்,
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சுஜித் விவகாரத்தில் பொறுப்புணர்வோடு பேசியிருக்க வேண்டும். குழந்தை எப்போது இறக்கும், எப்போது கருத்து சொல்லலாம் என காத்திருந்து ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த உடனேயே ஸ்டாலின் களத்திற்கு வந்து அரசுக்கு உரிய ஆலோசனை வழங்கி இருக்கலாம். அதனை விடுத்து குழந்தை இறப்பை வைத்து அரசியல் செய்வது என்பது எதிர்க்கட்சி தலைவருக்குரிய பொறுப்பான செயல் அல்ல.
ஒப்பந்த சாகுபடியில் நெல் சாகுபடிக்கு எந்த விதத்திலும் பிரச்சினை ஏற்படாத வண்ணம் தமிழக அரசு விவசாயிகளை பாதுகாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. தொடர்ந்து இருக்கும்
ஆட்சி இருக்கும்வரைதான் அ.தி.மு.க. இருக்கும் என டி.டி.வி. தினகரன் விமர்சனம் செய்துள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, தொடர்ந்து தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிதான் இருக்க போகிறது. ஆகையால் அ.தி.மு.க. தொடர்ந்து இருக்கும் என்றார்.

Related Tags :
Next Story