பொத்தேரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


பொத்தேரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 2 Nov 2019 9:45 PM GMT (Updated: 2 Nov 2019 7:52 PM GMT)

பொத்தேரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் பொத்தேரி பிள்ளையார்கோவில் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்தில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து ஏ.டி.எம் எந்திரத்தின் மேல்பகுதியில் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடைக்கப்பட்ட எந்திரத்தை பார்வையிட்டனர்.

விசாரணையில் பணம் திருட்டு போகவில்லை என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story