மாவட்ட செய்திகள்

தா.பேட்டை அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு + "||" + Theft of jewelery and cash from a retired civil servant's house near Thapet

தா.பேட்டை அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

தா.பேட்டை அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
தா.பேட்டை அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி,

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே பைத்தம்பாறை கிராமத்தில் வசித்து வருபவர் வீரையா (வயது 69). இவர் முசிறி தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அமராவதி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.


வீரையாவின் மகளுக்கு வருகிற 15-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனால் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வீரையா வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் அமராவதி தனது மகளை அழைத்துக்கொண்டு திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.

நகை, பணம் திருட்டு

பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 25 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன. இதுகுறித்து தா.பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு மர்ம ஆசாமிகள் விட்டுச்சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

பரபரப்பு

மேலும் இதுகுறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் மகளுக்கு வருகிற 15-ந்தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
திருப்பூரில் தொடர் வழிப்பறி, வீடு மற்றும் கடைகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. வடக்கன்குளத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருட்டு
வடக்கன்குளத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்று விட்டனர். வீட்டின் உரிமையாளார் 100 பவுன் நகைகளை உறவினர் வீட்டில் கொடுத்து சென்றதால் 100 பவுன் நகை தப்பியது.
3. தொழில் அதிபரை காரில் கடத்தி நகை, பணம் கொள்ளை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
வில்லியனூர் அருகே காரில் கடத்தி தொழில் அதிபரை தாக்கி, நகை, பணம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த கன்டெய்னர் பெட்டிகளை உடைத்து ரூ.50 லட்சம் டயர்கள் திருட்டு
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த 2 கன்டெய்னர் பெட்டிகளை உடைத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான டயர்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கும்மிடிப்பூண்டியில் கைவரிசை: அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.