சொத்து தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற முதியவர் கைது


சொத்து தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற முதியவர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2019 4:00 AM IST (Updated: 11 Nov 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் சொத்து தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

தானே, 

தானே மாவட்டம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சோம்நாத் (வயது65). இவரது மனைவி ஷரதா(55). இவர்களுக்கு சொந்தமான 2 வீடுகள் மகன்களின் பெயரில் இருந்தது. இது தொடர்பாக சோம்நாத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சோம்நாத் மனைவி ஷரத்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சோம்நாத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து தகராறில் மனைவியை, கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் தானேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story