சிவகிரியில் தந்தை-மகளுக்கு கத்திக்குத்து; தொழிலாளிக்கு வலைவீச்சு


சிவகிரியில் தந்தை-மகளுக்கு கத்திக்குத்து; தொழிலாளிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Nov 2019 10:45 PM GMT (Updated: 15 Nov 2019 2:33 PM GMT)

சிவகிரியில் தந்தை-மகளை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசாா் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிவகிரி, 

சிவகிரி அடுத்த அம்மன் கோவில் ஆயக்காட்டுபுதூரை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 60). இவருடையமனைவி லட்சுமி. இவர்களுடைய மகள் சீதா (28). இவருடைய கணவர் கோபாலகிருஷ்ணன். அனைவரும் கூலி தொழிலாளர்கள்.

அதேபகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(40). கூலிதொழிலாளி. இந்தநிலையில் சீதாவுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகியதால், நாச்சிமுத்து சீதாவையும், செந்தில்குமாரையும் கண்டித்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று நாச்சிமுத்து, லட்சுமி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிவகிரி கடைவீதியில் நடந்து வந்துகொண்டு இருந்தார்கள். அப்போது மோட்டார்சைக்கிளில் செந்தில்குமாரும், சீதாவும் வந்தனர். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த 3 பேரும் மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது செந்தில்குமாருக்குக்கும், நாச்சிமுத்துவுக்கும்இடையேவாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி செந்தில்குமார் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் நாச்சிமுத்துவை குத்தச் சென்றார். அதை சீதா தடுத்தார். இதில் அவருக்கு கை விரல்களில் படுகாயம் ஏற்பட்டது. மீண்டும் செந்தில்குமார் மீறிச்சென்று நாச்சிமுத்துவையும் கத்தியால் குத்தினார். இதில் அவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து செந்தில்குமார் அங்கிருந்து ஓடிவிட்டார். அதன்பின்னர் லட்சுமியும், கோபாலகிருஷ்ணனும் அக்கம் பக்கத்தினர உதவியுடன் நாச்சிமுத்துவையும், சீதாவையும் ஆம்புலன்சில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story