மாவட்ட செய்திகள்

நெய்தலூரில் துணிகரம்: வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ரூ.7 லட்சம் தப்பியது + "||" + Venture at Neidalur: Bank ATM The robbery attempt to break the machine escaped Rs 7 lakh

நெய்தலூரில் துணிகரம்: வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ரூ.7 லட்சம் தப்பியது

நெய்தலூரில் துணிகரம்: வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ரூ.7 லட்சம் தப்பியது
நெய்தலூரில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றபோது போலீசார் வந்ததால் ரூ.7 லட்சம் தப்பியது.
நச்சலூர்,

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள நெய்தலூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. வங்கியின் அருகே ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. வங்கிக்கு பாதுகாவலர்கள் இல்லாததால் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் ஏ.டி.எம். மையத்தை தினமும் ஆய்வு செய்வது வழக்கம். அதேபோல நேற்று அதிகாலை தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இஸ்திரிஸ் தலைமையிலான போலீசார் வாகனத்தில் நெய்தலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை பார்வையிட சென்றபோது திடீரென வங்கியின் ஏ.டி.எம். மையத்தின் உள்ளே இருந்து 2 மர்மநபர்கள் வெளியே ஓடி வந்தனர். பின்னர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.

ரூ.7 லட்சம் தப்பியது

இதையடுத்து ஏ.டி.எம். மையத்திற்குள் போலீசார் சென்று பார்த்தபோது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு, அதன் அருகே ஒரு கல்லும் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வங்கி கிளை மேலாளர் முகே‌‌ஷ்குமார் ரஞ்சனுக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வங்கி கிளை மேலாளர் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு வந்து, அதில் இருந்த பணத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்த ரூ.7 லட்சம் கொள்ளை போகாமல் தப்பியது தெரியவந்தது.

2 பேருக்கு வலைவீச்சு

இதையடுத்து ஏ.டி.எம். மையத்தின் மேல் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானகாட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். இதில் ஏ.டி.எம். மையத்திற்குள் 2 மர்ம நபர்கள் உள்ளே வந்திருந்ததும், அதில் ஒருவர் முகத்தில் கைக்குட்டையை கட்டியவாறு, கண்ணாடி அணிந்தார். மற்றொருவர் தலை, முகத்தோடு பனிக்குல்லா அணிந்து உள்ளே சென்று கல்லால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்தனர் இந்த சம்பவம் தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் வங்கி உதவி மேலாளர் வீட்டில் துணிகரம்: 97 பவுன் நகை-ரூ.1½ லட்சம் கொள்ளை
மதுரையில் வங்கி உதவி மேலாளர் வீட்டில் 97 பவுன் தங்க நகைகள், ரூ.1½ லட்சம் கொள்ளை போனது. அந்த வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கைவரிசை காட்டிய மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
2. திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக கணவன், மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. பெரம்பலூர் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை
பெரம்பலூர் அருகே தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
4. தக்கலை அருகே துணிகரம் வீட்டுக்குள் புதைக்கப்பட்ட 112½ பவுன் நகைகள் கொள்ளை
தக்கலை அருகே குழிதோண்டி புதைக்கப்பட்ட 112½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மருமகளை தாக்கி மர்மநபர்கள் கைவரிசை காட்டியதாக மாமனார் புகார் தெரிவித்துள்ளார்.
5. திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் ஒரு கிலோ நகையை போலீசார் எடுத்துக்கொண்டனர் கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு
திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் ஒரு கிலோ நகையை போலீசார் எடுத்துக்கொண்டனர் என்று கோர்ட்டு வளாகத்தில் கொள்ளையன் சுரேஷ் பரபரப்பாக குற்றம்சாட்டி பேட்டி அளித்தார்.