மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் ‌ஷில்பா வேண்டுகோள் + "||" + Local election Candidates must adhere to the rules - Collector Shilpa request

உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் ‌ஷில்பா வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் ‌ஷில்பா வேண்டுகோள்
உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் ‌ஷில்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லை, 

தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகள் மும்முரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில், கலெக்டர் பேசுகையில், ‘‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் வேட்பாளர் செலவினங்கள் கண்காணிப்பு பணிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 2-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறையாக கடைபிடிக்க வேண்டும்’’ என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் - ஜான்பாண்டியன் வற்புறுத்தல்
உள்ளாட்சி தேர்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
2. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் 730 பேர் மனு தாக்கல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று ஒரே நாளில் 730 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
3. உள்ளாட்சி தேர்தல்: இதுவரை 16,360 பேர் வேட்புமனு தாக்கல்
உள்ளாட்சி தேர்தலையொட்டி இதுவரை 16,360 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
4. நீலகிரி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
5. உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு கோரிக்கை
தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.