மாவட்ட செய்திகள்

திருவாரூர் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி + "||" + Awful near Thiruvarur: Electricity struck Three killed including brother-in-law

திருவாரூர் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி

திருவாரூர் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி
திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலியானார்கள்.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கோவில்திருமாளம் தலையாரிபாளையம் தெருவை சேர்ந்தவர் சந்திரா. இவருடைய மகன்கள் இளையராஜா(வயது 27), இளவரசன்(25). இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இவர்களுடைய மாமா பாரி (38).


இவர்கள் 3 பேரும் தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் முன்புறமும், பின்புறமும் கூரைக்கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வீட்டுக்குள் மழைநீர் புகுந்து விடாமல் இருக்க வீட்டையும், கூரையையும் இணைக்கும் பகுதியில் தகரம் அமைக்கும் பணியில் இளையராஜா, இளவரசன், பாரி ஆகியோர் நேற்று மாலை ஈடுபட்டு இருந்தனர்.

3 பேர் பலி

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வீட்டுக்கு வரும் மின்சார வயரில் தகரம் உரசியது. உடனே தகரத்தை பிடித்திருந்த இளையராஜா, இளவரசன், பாரி ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்து அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இளையராஜா, இளவரசன், பாரி ஆகிய 3 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த பாரிக்கு அனிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலியாகினர்.
2. திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் பலி; 36 பேர் காயம்
கோக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியானார். 36 பேர் காயம் அடைந்தனர்.
3. வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் பார்வையாளர் பலி; 25 பேர் காயம்
அன்னவாசல் அருகே வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 25 பேர் காயமடைந்தனர்.
4. நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலி
நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
5. கார் மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் பலி
பெரம்பலூர் புறநகர், துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முத்துகுமார்(வயது 39).