மாவட்ட செய்திகள்

நச்சலூர் பகுதிகளில் நெற்பயிர்களில் குலைநோய் தாக்குதல் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை + "||" + In rice fields in Nachalur Farmers' request to provide relief for bubonic attack

நச்சலூர் பகுதிகளில் நெற்பயிர்களில் குலைநோய் தாக்குதல் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

நச்சலூர் பகுதிகளில் நெற்பயிர்களில் குலைநோய் தாக்குதல் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
நச்சலூர் பகுதிகளில் விளைந்த நெற்பயிர் களில் குலைநோய் தாக்கி உள்ளது. இதனால் அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நச்சலூர்,

கரூர் மாவட்டம், சூரியனூர், நச்சலூர், நங்கவரம், நெய்தலூர், சேப்ளாப்பட்டி, கட்டாணிமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயல்களில் நெற் பயிர்களை பயிரிட்டு உள்ளனர். இந்தநிலையில் விளைந்த நெற்பயிர்களில் குலை நோய் தாக்கி 70 சதவீதம் பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் நெற்கதிர்கள் விளைச்சல் மற்றும் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. குலை நோய் தீவிர தாக்குதலில் நெற்பயிர்கள் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றத்துடன் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இதுவரை செலவு செய்த விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளனர்.


விளைச்சல் பாதிப்பு

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆடி மாதத்தில் நெற்பயிர்கள் நடவு செய்து தை மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம். அது போல் கடந்த ஆடி மாதம் நடவு செய்து விவசாய பணிகளை செய்து வந்தோம். தற்போது நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடை செய்யும் நேரத்தில் நெற்பயிர்களில் குலை நோய் தாக்கியதில் பயிர்கள் காய்ந்து சருகு போல காட்சியளிக்கின்றது. இதனால் 70 சதவீதம் நெல் விளைச்சல் பாதிப்பு அடைந்துள்ளது. இதற்காக செலவு செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. குலை நோய் தாக்குதலில் பாதிப்பு அடைந்ததால் மாடுகளுக்கு வைக்கோல் தீவனங்களுக்கு கூட பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நெல் சாகுபடி செய்த விவசாய குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருந்து வருகின்றோம். சாகுபடி செய்த நெற்பயிர்களுக்கு காப்பீட்டு தொகையையும் செலுத்தி உள்ளதால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு கணக்கீடு செய்து அரசு உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் வாங்க ரூ.3 ஆயிரம் கோடி தேவை; பிரதமருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கோரிக்கை
முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவை வாங்க ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்து உள்ளார்.
2. ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. கொரோனா வைரஸ் பீதியால் ஓசூரில் ரோஜா மலர் வர்த்தகம் பாதிப்பு டன் கணக்கில் தேங்கியதால் விவசாயிகள் சோகம்
கொரோனா வைரஸ் பீதியால் ஓசூரில் ரோஜா மலர் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் தேங்கியதால் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.
4. பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் திறக்கக்கோரி காய்ந்த வாழை மரங்களுடன் விவசாயிகள் ஊர்வலம்
தொட்டியம் பகுதி பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடத்தினர். இதனால் திருச்சி-நாமக்கல் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. காவிரி டெல்டா பகுதியில், இயற்கை வேளாண்மை பல்கலைக்கழகம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க காவிரி டெல்டா பகுதியில் இயற்கை வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.