ராஜகண்ணப்பன் தி.மு.க.வில் இணையும் விழா மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வருகை


ராஜகண்ணப்பன் தி.மு.க.வில் இணையும் விழா மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வருகை
x
தினத்தந்தி 23 Feb 2020 5:30 AM IST (Updated: 23 Feb 2020 1:56 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நடக்கும் விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.

மதுரை,

மதுரை ஒத்தக்கடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் விழாவில் முன்னாள் அமைச்சரான ராஜகண்ணப்பன் தி.மு.க.வில் இணைகிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வருகிறார்.

மதுரை விமானநிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வரும் அவருக்கு வழிநெடுக கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர்.

ஆதரவாளர்களுடன் இணைப்பு

ஓட்டலில் ஓய்வு எடுத்த பின்னர், பிற்பகல் 3 மணியளவில் ஒத்தக்கடையில் நடக்கும் விழாவில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அப்போது முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைகிறார். 

Next Story