மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது கோவை முஸ்லிம்கள் போராட்டத்தில் சீமான் பேச்சு + "||" + Citizenship Amendment Act Against All People Seeman Speech In The Muslims Fight Of Coimbatore

குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது கோவை முஸ்லிம்கள் போராட்டத்தில் சீமான் பேச்சு

குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது கோவை முஸ்லிம்கள் போராட்டத்தில் சீமான் பேச்சு
குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது என்று கோவையில் நடந்த முஸ்லிம்கள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
போத்தனூர்,

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முஸ்லிம்கள் நேற்று 4-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.


அப்போது அவர் பேசியதாவது:-

72 ஆண்டுகால இந்தியாவில் பல அரசுகள் ஆட்சி செய்து இருக்கின்றன. இத்தனை ஆண்டுகளில் யார் இந்தியன் என்று கூட தெரியாமல் இருந்து இருக்கின்றனர். ஆனால் தற்போது இந்திய குடியுரிமைக்கு பெற்றோரின் பிறப்பு சான்றிதழையும் காட்ட வேண்டும் என்கின்றனர். எனக்கு சான்றிதழ் இருக்கிறது. என் பெற்றோருக்கு சான்றிதழ் இல்லை என்று பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசு திசை திருப்புகிறது

நாட்டை இப்படி பதற்றமாக வைத்திருப்பதால் இந்தியன் ஏர்லைன்ஸ், எல்.ஐ.சி. விற்பனைக்கு வந்ததை யாரும் பேசவில்லை. தூய காற்று வாங்க ரூ.4 ஆயிரத்து 100 கோடி செலவழிக்க போகிறார்கள். இதுபற்றி யாரும் பேசவில்லை. குடியுரிமை பிரச்சினை ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுகிறது. இந்த சட்டத்தை கொண்டு வந்து மக்களை மத்திய அரசு திசை திருப்புகிறது. குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது.

குடியுரிமை சான்றிதழை அவர்கள் கேட்க போவதில்லை. நாமும் கொடுக்க போவதில்லை. இந்த சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். கொரோனா வைரஸ் தமிழகத்திற்கு வரவில்லை. ஆனால் நாம் முன்எச்சரிக்கையாக இருக்கிறோம். அது போலவே குடியுரிமை திருத்த சட்டம் வந்தால் பாதிப்பு என்பதால் எதிர்க்கிறோம்.

10 ஆண்டுகளாக முறைகேடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் ஒரே மையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த முறைகேடு நடந்து இருக்கிறது.

காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஒரே எதிரி நாம் தமிழர் கட்சி தான். காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இதே போல பாபர் மசூதியை இடித்தது பா.ஜனதா கட்சி. அதை இடிக்க அனுமதித்தது காங்கிரஸ் கட்சி. இதை யாராலும் மறுக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல் 2-வது அலை ஏற்படாமல் இருக்க தீவிர நடவடிக்கை பிரதமர் நடத்திய ஆலோசனையில் உத்தவ் தாக்கரே பேச்சு
மராட்டியத்தில் கொரோனா பரவல் 2-வது அலை ஏற்படாமல் இருக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பிரதமர் நடத்திய ஆலோசனையில் உத்தவ் தாக்கரே பேசினார்.
2. கணவன்-மனைவி இடையே பிரச்சினை வந்தால் மவுனம் மட்டுமே மருந்து போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டால் மவுனம் மட்டுமே நல்ல மருந்தாக இருக்கும் என்று போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பேசினார்.
3. மழையால் குடகில் பெரிய அளவில் பாதிப்பு கலெக்டருடன், எடியூரப்பா பேச்சு மக்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு
குடகில் கனமழையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, மக்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
4. சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் இந்த ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரிகள் செயல்படும் முதல்-அமைச்சர் பேச்சு
சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் இந்த ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரிகள் செயல்படும் என்றும், தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. 4 வருட விரிவான விவாதம், லட்சக்கணக்கானோரின் ஆலோசனைகளுக்கு பின் தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல்; பிரதமர் மோடி பேச்சு
4 வருட விரிவான விவாதங்கள், லட்சக்கணக்கானோரின் ஆலோசனைகளுக்கு பின் தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.